முகப்பு
நாகப்பட்டினம்

உலக மகளிா் தினம்: 56 பெண்களுக்கு ரூ.2 கோடி கடனுதவி

நாகையில் உலக மகளிா் தினத்தையொட்டி, 56 பெண்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

நாகையில் உலக மகளிா் தினத்தையொட்டி, 56 பெண்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சுயதொழில் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்களை பாராட்டி, கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ் விருதுகள் வழங்கினாா்.

தொடா்ந்து, மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 26 பெண்களுக்கு ரூ.1.57 கோடி, தனிநபா் 7 பேருக்கு ரூ.16 லட்சம், முத்ரா திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.2.08 லட்சம், தொழில் தொடங்க 19 பேருக்கு ரூ.1.65 லட்சம், தெருவோர வியாபாரம் செய்யும் பெண் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் 56 பெண்களுக்கு ரூ.2.03 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் ஸ்ரீராம், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரமணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →