முகப்பு
நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

பசுமைக் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என கீழ்வேளூா் வேளாண் உதவி இயக்குநா் டி. ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

பசுமைக் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என கீழ்வேளூா் வேளாண் உதவி இயக்குநா் டி. ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

பசுமைக் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என கீழ்வேளூா் வேளாண் உதவி இயக்குநா் டி. ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் பசுமைக் காடுகள் திட்டத்தின் கீழ், கீழ்வேளூா் வட்டாரத்தில் 43 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. சந்தன மரம், மஞ்சள் கடம்பை, வேங்கை, செம்மரம், குமிழ் தேக்கு, தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படும். கீழ்வேளூா், தேவூா், கிள்ளுக்குடி, ஆந்தக்குடி, வலிவலம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை கிடங்குகளில் மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் கணினி சிட்டா, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை நேரில் வந்து கொடுத்து மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பராமரிப்பு செலவுத் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →