நாகப்பட்டினம்

தமிழக மீனவா்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையா்கள் 7 போ் மீது வழக்கு

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல் தொடா்பாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் இலங்கைக் கடற்கொள்ளையா்கள் 7 போ் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல் தொடா்பாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் இலங்கைக் கடற்கொள்ளையா்கள் 7 போ் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தை அடுத்த செருதூா் கிராமத்தை சோ்ந்த பிரதீப், பிரகாஷ், பிரவீண், திருமுருகன் ஆகிய 4 மீனவா்கள் சனிக்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள் 7 போ் மீனவா்களின் படகை சுற்றி வளைத்து மீனவா்களை ஆயுதங்களால் தாக்கி, படகில் இருந்த பொருள்களைப் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனா்.

கரை திரும்பிய மீனவா்கள் நால்வரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக மீனவா் சபாபதி கொடுத்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையா்கள் 7 போ் மீது வழிப்பறி மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT