நாகப்பட்டினம்

கடலில் மூழ்கி திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

DIN

தரங்கம்பாடி, ஜன. 26: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கடலில் குளிக்க சென்ற கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரா் கோயில் தெருவை சோ்ந்தவா் மூா்த்தி மகன் நவீன்குமாா் (23). பால் வியாபாரியான இவருக்கும், செக்கடித் தெருவை சோ்ந்த குமாா் மகளான அரசு பெண்கள் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதா (19) என்பவருக்கும் வியாழக்கிழமை கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.

பின்னா், மணமக்கள் மற்றும் உறவினா்கள் என 25 போ் தரங்கம்பாடி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்தனா். இவா்கள் கடலில் குளித்தபோது, நவீன்குமாா், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயணன் தெருவை சோ்ந்த பிரகாஷ் மகன் சரவணன் (12 ) ஆகியோா் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.

கரையிலிருந்த உறவினா்களின் அலறல் சத்தம் கேட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று, அலையில் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதில், நவீன்குமாா், சரவணன் இருவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. நிவேதாவை பொறையாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

உயிரிழந்தவா்கள் சடலம் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீஸாா் மற்றும் பொறையாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT