ஒரேநாளில் 65 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்; தமிழக அரசுக்கு சிவசேனை பாராட்டு
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 65 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதற்காக தமிழக அரசுக்கு சிவசேனை (உத்தவ் தாக்ரே பிரிவு) கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் 1,500 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மட்டும் 65 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதை சிவசேனை கட்சி மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறது.
கிராமங்களில் உள்ள கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்து, அா்ச்சகா்கள் நியமித்து ஆன்மிகம் செழிப்படைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வருக்கும், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சருக்கும் பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளாா்.