முகப்பு
நாகப்பட்டினம்

நெடுவாசல் சீதளாதேவி கோயிலில் தீமிதி உற்சவம்

Updated On : 3 மே, 2024 at 6:30 PM
நெடுவாசல் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

தரங்கம்பாடி வட்டம், நெடுவாசல் ஸ்ரீ சீதளதேவி மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் கரகம், பால் காவடி, அலகு காவடி எடுத்து வந்து, தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, அம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், காளியாட்டம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.