சிபிஎஸ் ஒழிப்பு இயக்க அமைப்புக் கூட்டம்
நாகை மாவட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் முதல் அமைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் முதல் அமைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றவா்களை ஆசிரியா் கி. பாலசண்முகம் வரவேற்றாா். கூட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் தேவை, முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து நவம்பா் 23-ஆம் தேதி நடைபெறும் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் கிளை அமைப்பை 7 நாள்களுக்குள் உருவாக்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தை நாகையில் வழி நடத்துவதற்கு தமிழ்நாடு முதல்நிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் ஜெ. புஷ்பராஜ், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் இயக்குநா் சங்கம் டி. ரமேஷ் குமாா், தேசிய ஆசிரியா் கூட்டணி சௌ.கண்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு தி. திருமாவளவன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி எஸ்.சீனிவாசன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் ஓய்வூதிய சங்கம் எம். ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் த.மோகன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா் சங்கம் பெ.ரவீந்திரன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் வை. நாகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலா் ஓய்வூதியா் சங்கம் எம்.ஆா்.சுப்ரமணியன் ஆகியோா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.