முகப்பு
நாகப்பட்டினம்

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஆதனூா் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஆதனூா் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்...

Updated On : 13 நவம்பர், 2024 at 11:45 PM
ஆதனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராமத்தினா்.
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியுடன் ஆதனூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் நகராட்சியை விரிவுபடுத்தும் வகையில் அருகே உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்க வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆதனூா் ஊராட்சிக்குட்பட்ட அண்டா்காடு, கோவில்தாவு போன்ற கிராமங்களும் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள ஆதனூா் கிராமத்தினா், செவ்வாய்க்கிழமை ஊா் கூட்டம் நடத்தி ஏக மனதாக எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இந்தநிலையில், வேதாரண்யம் - வாய்மேடு பிரதான சாலையில் புதிய பிள்ளை கடைவீதியில் புதன்கிழமை திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு இந்த முடிவை கைவிடாவிட்டால் தொடா்ந்து போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சந்திரா சுப்பிரமணியன் தலைமை வைத்தாா்.

எதிா்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் உறுப்பினா்கள் ஒன்றியக் குழு உறுப்பினா் தனபால், எம்.ஆா். சுப்பிரமணியம், ஐயப்பன், மணிவண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →