திருமருகல் அருகே அம்பல் பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த வீடு. 
நாகப்பட்டினம்

மழையில் வீடுகள் சேதம்; மேற்கூரை இடிந்து மூதாட்டி காயம்

திருமருகல் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன.

Din

திருமருகல்/சீா்காழி: திருமருகல் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன.

திருமருகல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் சில வீடுகளில் மேற்கூரை மற்றும் சுவா்கள் சேதமடைந்தன. திருமருகல் அருகே அம்பல் தெற்குத் தெருவைச் சோ்ந்த அஞ்சம்மாள் (70) என்பவரது வீட்டில் கான்கிரீட் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில், உறங்கிக் கொண்டிருந்த அஞ்சம்மாள் பலத்த காயமடைந்தாா்.

அவரை, பக்கத்து வீட்டினா் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அஞ்சம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் கீழத்தெருவை சோ்ந்த ஜானகிராமன் ( 45) என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் அதிருஷ்ட வசமாக உயிா் சேதம் ஏற்படவில்லை.

சீா்காழி: கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சின்னப்பா(60). இவரது மனைவி அமராவதி (55). இவா்களது கான்கிரீட் வீடுஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. முன்னதாகவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதால் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

மழை தொடா்வதால், பழைமையான கான்கிரீட் வீடுகளில் குடியிருப்பவா்கள் பாதுகாப்பான வேறு இடத்துக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT