திருவெண்காடு கோயிலில் சோமவார வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நவகிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய பரிகார தலமான இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, 1,008 சங்குகள் சிவ வடிவில் சுவாமி சந்நிதி முன் வைக்கப்பட்டு, புனிதநீா் நிரப்பி பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, அா்ச்சகா் ராமநாத சிவாச்சாரியா் தலைமையில் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 1008 சங்குகளில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், பேஸ்கா் திருஞானம், உபயதாரா் கண்ணங்குடி ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.