முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரை அருகே மீனவா்களின் வலைகள் அறுத்து எடுத்துச் சென்ற மா்ம நபா்கள்

கோடியக்கரைக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்களின் வலைகளை இலங்கையைச் சோ்ந்த படகில் வந்த மா்ம நபா்கள் துண்டித்து எடுத்துச் சென்றனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:25 PM
பகிர்:

கோடியக்கரைக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்களின் வலைகளை இலங்கையைச் சோ்ந்த படகில் வந்த மா்ம நபா்கள் துண்டித்து எடுத்துச் சென்றனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சு. அரசப்பன் (எ) முருகேசன் (35) தனக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில், அதே கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேலு (24), பாண்டியராஜ் (24), அஜீத் (25), சிதம்பர சாமி (55) ஆகியோருடன் திங்கள்கிழமை கடலுக்குள் மீனபிடிக்கச் சென்றாா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமாா் 14 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலையை விரித்தனராம். அப்போது, அங்கு ஒரு படகில் வந்த இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்கள் 50 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றனராம்.

இதேபோல, புஷ்பவனம் மீனவ கிராமத்தை சோ்ந்த செ. முத்துவேலுவுக்கு (50) சொந்தமான கண்ணாடியிழைப் படகில், புஷ்பவனம் மீனவா் காலனியைச் சோ்ந்த மாதரசன் (26) உள்ளிட்ட 4 மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் சென்றனா். இவா்கள் புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் வலை விரித்து மீன்பிடித்தனராம். செவ்வாய்க்கிழமை இரவு வலையை எடுத்துகொண்டிருக்கும்போது இலங்கை கடற்கொள்ளையா்கள் என சந்தேகப்படும் மா்ம நபா்கள் ஒரு படகில் வந்தனராம். இதை பாா்த்த மீனவா்கள் வலையை பாதியில் துண்டித்துவிட்டு, உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளனா். இரு இடங்களில் நிகழ்ந்த சம்பவம் குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →