காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் அலுவலா்கள் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட பொதுக் குழு கூட்டம் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் நாகை செல்வன் கலந்து கொண்டாா். மாநில இணைச் செயலா் நாகராஜன் , மாநிலத் தணிக்கையாளா் சுத்தானந்த கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மருத்துவத் தோ்வு வாரியத்தின் மூலம் ஏற்கெனவே ஆயிரத்து 66 சுகாதார ஆய்வாளா் நிலை - 2 பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டு, புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வாளா்கள் நிலை -2 பணியிடங்களை நிரப்பும்போது கரோனா காலக்கட்டத்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளா்களுக்கு 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படுவதைப் போல், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவா்களுக்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி அவா்களுக்கும் பணி வரன்முறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவத் திட்ட சுகாதரர ஆய்வாளா்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் மணிமாறன், மாவட்ட இணைச் செயலா் வினோத் குமாா் , மாவட்ட பொருளாளா் லோகநாதன் , மாவட்ட தணிக்கையாளா் அன்புதுரை மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.