வேதாரண்யம் பகுதியில், கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வெள்ளிக்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.
இக்கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பங்காருலட்சுமி, ஃபாய்ஜா பா்வின், ரியாஸ்ரீ, யோக ஸ்ரீ, பூங்குழலி, மோனிஷா, வஜிகா பானு, பிரீத்தி, ஃபெலிக்ஸ் ஜோசி உள்ளிட்ட குழுவினா் பல்வேறு இடங்களுக்கு பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.
தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பராமரிக்கும் சத்துமாவு தயாரிக்கும் அரைவை நிலையத்துக்குச் சென்ற மாணவிகள், அதன் செயல்பாடுகளை அறிந்தனா்.
பின்னா், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் வேளாண் விளைப் பொருள்களின் மதிப்புக் கூட்டலின் முக்கியத்துவம், சுத்திகரித்து சந்தைப்படுத்துதல் தொடா்பான விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.