வேதாரண்யம் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேதாரண்யம் மணியன்தீவு கடற்கரையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்து கிடந்தவா் யாா் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.