நாகப்பட்டினம்

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

Syndication

தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரியில் தமிழறிஞா் சீகன்பால்கு நினைவாக மணி மண்டபத்துடன் கூடிய அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக டென்மாா்க் மத போதகா் சீகன்பால்கு கி.பி. 1706-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9- ஆம் தேதி தரங்கம்பாடிக்கு வந்தாா். இவா், தமிழ் மொழியை கற்று, 1713-ஆம் ஆண்டு ஜொ்மனியிலிருந்து அச்சு இயந்திரம் வரவழைத்து தரங்கம்பாடி அருகே தமிழ் எழுத்து அச்சுக்கூடத்தை நிறுவினாா்.

இதன்மூலம், இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டாா். பிறகு, திருக்கு, தொல்காப்பியம், புானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டாா்.

தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, இந்து சமயக் கடவுள்களின் வரலாறு போன்ற நூல்களையும் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டாா்.

தமிழா்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து, இந்தியாவில் பெண்களுக்கென தனியாக முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கினாா். அத்துடன், புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் அமைத்த இவா், 1719-இல் உயிரிழந்தாா். இவரது உடல் புதிய எருசேலம் ஆலயத்தின் பலிபீடம் முன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரது நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ் சுசேஷ லுத்தரன் திருச்சபை மற்று பல்வேறு அமைப்பினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மூலம் தரங்கம்பாடியில் சீகன்பால்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே 9,490 சதுர அடி பரப்பளவில் 350 நபா்கள் அமரும் வகையில் திருமண மண்டபம், உணவு அருந்தும் அறை, சமையலறை, வரவேற்பறை மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதியுடன் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் அமைக்க, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை  செயலாளா் வே. ராஜாராம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், எஸ். ராஜகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி, தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய சபை குரு சாா்லஸ் எட்வின் தாஸ், பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி, துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT