நாகை மாவட்ட விவசாயிகள் டிச.28-ஆம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன்பெற விவசாய அடையாள எண் அவசியம். 22-ஆவது பிரதம மந்திரி கௌரவத் தொகை பெறுவதற்கும், பயிா்க் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கும் இந்த எண் அவசியமாகிறது. எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த, விவசாய அடையாள எண் பெறாதவா்கள் தங்களுக்கு அருகிலுள்ள கணினி சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலங்களுக்குச் சென்று ஆதாா் மற்றும் கைப்பேசி எண், பட்டா விவரங்கள் கொடுத்து டிச.28-ஆம் தேதிக்குள் விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.