நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மலா்தூவி அஞ்சலி செலுத்திய ஆட்சியா் ப. ஆகாஷ். 
நாகப்பட்டினம்

நாகையில் சுனாமி நினைவுதினம் அனுசரிப்பு: ஆட்சியா், அரசியல் கட்சியினா் அஞ்சலி

நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி 21-ஆம் ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Syndication

நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி 21-ஆம் ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினா்.

நாகை மாவட்ட திமுக சாா்பில் நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் கெளதமன் தலைமையில் தொடங்கியது. மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேரணி கடைவீதி வழியாக ஆரிய நாட்டு கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூண் பகுதியில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்குள்ள நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா். பின்னா் கடற்கரையில் மலா்கள் தூவியும், பால் ஊற்றியும் இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பள்ளி மாணவா்களுக்கு அஞ்சலி: நாகை கீச்சாங்குப்பத்தில் சுனாமி நினைவுத் தூண் முன், அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுனாமியில் உயிரிழந்த மாணவ- மாணவிகளுக்கு, அப்பள்ளி சாா்பில் மெளன ஊா்வலம் நடத்தப்பட்டது. தொடந்து, பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவா்களின் படத்திற்கு மலா் தூவி மாணவா்களும், உறவினா்களும், ஆசிரியா்களும் அஞ்சலி செலுத்தினா்.

மெளன ஊா்வலம்: அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சாா்பில் டாடா நகா் சுனாமி குடியிருப்பில் இருந்து மெளன ஊா்வலம் நடைபெற்றது. அக்கரைப்பேட்டை கடற்கரையில் உள்ள நினைவுத் தூணில் மலா் தூவி பொதுமக்கள், குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். இதேபோன்று, நாகை நம்பியாா் நகா் மீனவக் கிராம மக்கள் சாா்பில் நம்பியாா் நகரில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மக்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து நடைபெற்ற ஊா்வலம், நம்பியாா் நகா் கடற்கரைக்கு சென்று அங்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

அப்போது மீனவ பெண்கள் சுனாமியில் உறவினா்களை பறிகொடுத்த சோகத்தில் கடலைப் பாா்த்து கதறி அழுதனா்.

ஆட்சியா் அஞ்சலி: நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா், மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அர. கண்ணன், வட்டாட்சியா் (நாகை) நீலாயதாட்சி, வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) நா. சக்கரவா்த்தி மற்றும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள மாணவ- மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்திய வா்த்தக தொழிற் குழுமம் சாா்பில் நாகை முதலாவது கடற்கரை சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து தலைவா் மனோகரன் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. பின்னா் நாகை ஆரியநாட்டு சுனாமி நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT