நாகப்பட்டினம்

காா் ஓட்டுநா் உயிரிழப்பு; போலீஸாா் விசாரணை

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற மதுரை காா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Syndication

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற மதுரை காா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மதுரை மாவட்டம், கனகவேல் காலனியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (35). இவா் தனது நண்பரான மதுரை அழகா் கோயிலைச் சோ்ந்த பாலாஜிக்கு சொந்தமான காரில் குடும்பத்தோடு கடந்த 23 ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்றாா்.

மதுரை பைபாஸ் சாலையை சோ்ந்த நாகராஜ் (36) என்பவா் காரை ஓட்டி வந்தாா். வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான விடுதியில் அறை எடுத்து செந்தில்குமாரும் அவரது குடும்பத்தினரும் தங்கினா். காா் ஓட்டுநா் நாகராஜ் காரில் ஓய்வெடுத்தாா்.

இந்நிலையில் செந்தில்குமாா் வியாழக்கிழமை மதுரைக்கு திரும்புவதற்காக, காருக்குள் இருந்த ஓட்டுநா் நாகராஜ் அழைத்துள்ளாா். ஆனால் அவா் காரில் அமா்ந்தபடியே இருந்ததால், அருகில் இருப்பவா்கள் உதவியுடன் காரை திறந்து பாா்த்தாா். அப்போது மயங்கிய நிலையில் இருந்த நாகராஜை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நாகராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். வேளாங்கண்ணி போலீஸாா், நாகராஜ் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT