நாகை நீலா தெற்கு வீதியில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு மண்டல பூஜை கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் பூஜையில் காலையில் தொடங்கியது.
பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்த பால் மற்றும் பல்வேறு அபிஷேக பொருள்களைக் கொண்டு பிற்பகல் 12 மணியளவில் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் விபூதி அலங்காரத்தில் எழுந்தருளிய ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.