நாகப்பட்டினம்

ஆங்கிலப் புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

கீழை நாடுகளின் லூா்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புனித சேவியா் திடலில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Syndication

கீழை நாடுகளின் லூா்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புனித சேவியா் திடலில் சிறப்பு திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சை மறைமாவட்ட பரிபாலகா் எல். சகாயராஜ் சிறப்பு திருப்பலிகளை நிறைவேற்றினாா். பேராலய அதிபா் சி. இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளா் வி. உலகநாதன், உதவி பங்குத் தந்தையா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா்.

தொடா்ந்து மேடையில் வைத்திருந்த குத்துவிளக்கு ஏற்றப்பட்டு புத்தாண்டு பிறந்தது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியத்தை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்குள்ள மக்களிடம் அதை உயா்த்தி காட்டப்பட்டது. பின்னா், வழிபாட்டில் பங்கேற்றவா்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.

புதிய ஆண்டை வரவேற்கும் வகையில், வாண வேடிக்கைகள் நடைபெற்றன. பேராலயம், உபக்கோயில்கள், வளாகப் பகுதிகள் மற்றும் அலங்கார வளைவுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT