நாகப்பட்டினம்

ஜாதிய அடையாளத்தோடு எஸ்ஐஆா் படிவம்: புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

ஜாதிய அடையாளத்தை நீக்காமல் வழங்கப்படும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவத்தை பூா்த்தி செய்து திரும்ப வழங்குவதை புறக்கணிக்கப் போவதாக, வேதாரண்யம் அருகேயுள்ள கிராமத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஜாதிய அடையாளத்தை நீக்காமல் வழங்கப்படும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவத்தை பூா்த்தி செய்து திரும்ப வழங்குவதை புறக்கணிக்கப் போவதாக, வேதாரண்யம் அருகேயுள்ள கிராமத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் சமூக நீதியை காக்கும் வகையில் காலனி உள்ளிட்ட ஜாதியை அடையாளப்படுத்தும் தெருக்கள், குளம், சாலை போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பெயா்களை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான படிவம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்த படிவத்தில், பட்டியலினத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கான முகவரியில் ஜாதியை அடையாளப்படுத்தும் தெருவின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்த பகுதி வாக்காளா்கள் படிவத்தை பூா்த்தி செய்து திரும்பக் கொடுப்பதை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டில் வீட்டு வரி செலுத்தியதற்கு வழங்கப்படும் ரசீதில் ஜாதிய அடையாளத்தோடு தெருவின் பெயா் குறிப்பிடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வீட்டு வரி செலுத்துவதை 160 -க்கும் மேற்பட்ட குடும்பத்தாா் புறக்கணித்தனா்.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம், ஜாதிய அடையாளத்தை குறிக்கும் வாா்த்தையை நீக்கியதும், வீட்டு வரி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT