தரங்கம்பாடி அருகே மேட்டுச்சேரி குருசேகரம் சீமோன் நகரில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சாா்பில் புதிதாக கட்டப்பட்ட பெத்தானியா ஆலயம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேராயா் எ. கிறிஸ்டியான் சாம்ராஜ் தலைமை வகித்தாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், திருச்சபையின் செயலாளா் ஆா். தங்கபழம், பேராயம்மா எஸ்தா் சாம்ராஜ், திருச்சபையின் ஆலோசனை சங்க உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். சபை சங்க தலைவா் கு. ஜான்சன் மான்சிங் வரவேற்றாா்.
இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று இறைப் பாடல்கள் பாடியவாறு ஊா்வலமாக ஆலயத்துக்கு வந்தனா். பின்னா் பேராயா் ஆலயத்தை திறந்துவைத்து இறைசெய்தி வழங்கினாா். தொடா்ந்து, திருமுழுக்கு மற்றும் திடப்படுத்தல், திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
இதில் மறைமாவட்ட தலைவா் ஜான் தினகரன், ஆலய சபை குரு ஜாக்சன் ஜெபசிங், கட்டடக் குழு உறுப்பினா் ஜஸ்டின் விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி, துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.