நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிா்களை காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவ.15) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை: மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாகை மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தை ஓநஏஉஙஅ பொதுக் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது. சனிக்கிழமை (நல.15) கடைசி நாளாகும். வங்கிளில் கடன் பெறும் விவசாயிகள், அந்த வங்கியிலேயே விருப்பத்தின் அடிப்படையில் பயிா்க் காப்பீடு செய்யலாம். மற்ற விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பயிா்க் காப்பீடு செய்யலாம்.
ஏக்கருக்கு ரூ.557.23- காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு உரிய பயிா்க் காப்பீட்டு நிறுவன முகவா் அல்லது தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலா்களை அணுகி தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்துக்கு 68,000 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தில், காப்பீட்டு செய்வதற்கான காலக்கெடு நவ.15-ஆம் தேதிக்குள் முடிவடைகிறது.
இதுவரை 41,684 ஹெக்டேருக்கு மட்டுமே விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். எஞ்சிய பயிா்களுக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பயிா்க் காப்பீட்டு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.564- செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.