நாகூா் கௌரியாா் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் ப. ஆகாஷ். 
நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் பூா்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் பூா்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்

Syndication

நாகை, கீழ்வேளூா் தொகுதிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் பூா்த்தி செய்வதற்கான முகாம்களில் ஆட்சியா் ப. ஆகாஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள, நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்ய உதவுவதற்காகவும், சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவது தொடா்பாகவும், வாக்காளா்கள் தங்களது 2002-ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்தின் விவரங்களை பெற ஏதுவாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு தீவிர திருத்தத்துக்கான சிறப்பு உதவி முகாம் அவரவா் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகை தொகுதிக்குள்பட்ட நாகூா் கௌரியாா் நடுநிலைப்பள்ளி, நரிமணம் ஊராட்சி தொடக்கப் பள்ளி, குத்தாலம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாம்களையும், கீழ்வேளுா் தொகுதிக்குட்பட்ட குருமணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமையும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா்.

ஆட்சியருடன், நாகை கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT