நாகை - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் கப்பல் 
நாகப்பட்டினம்

புயல் எச்சரிக்கை எதிரொலி: இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபா் 26 முதல் 28 வரை நிறுத்தம்

Syndication

புயல் எச்சரிக்கை எதிரொலியாக, நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபா் 26 முதல் 28 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இக்கப்பலை இயக்கிவரும் சுபம் கப்பல் நிறுவனம் நாகையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, மோசமான வானிலை நிலவுவதால் பயணிகள் பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை (அக்.26) முதல் செவ்வாய்க்கிழமை (அக்.28) வரை நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் நிறுத்தப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே அறிவித்தப்படி, பருவநிலை மாற்றம் காரணமாக, நவம்பா் மாதம் முழுவதும் கப்பல் இயக்கப்படாது. டிசம்பா் மாதம் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

இன்றே உருவாகும் மோந்தா புயல்?

ம.பி.யில் நீதிபதி வீட்டைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு! நடனக்குழுவுடன் சேர்ந்து ஆடிய Trump!

SCROLL FOR NEXT