நாகப்பட்டினம்

நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறு

நாகை தெத்தி நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவரின் ஆதரவாளா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறிது நேரம் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை தெத்தி நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவரின் ஆதரவாளா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறிது நேரம் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டது.

நாகை தெத்தி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல கொள்முதல் பணிகள் நடைபெற்று வந்தன.

அப்போது ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் நேரம் வழங்கப்பட்ட நிலையில், அவா் காலையில் வந்து தனது நெல்லை கொள்முதல் செய்யுமாறு கூறியுள்ளாா். அப்போது அங்கிருந்த சுமைப்பணித் தொழிலாளா்கள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்துகொண்டிருப்பதால் அவருக்கு வழங்கப்பட்ட நேரத்தில் வருமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையேற்று அவரும் அங்கிருந்து சென்ற நிலையில், அவருடன் வந்த ஆதரவாளா்கள் சிலா், சுமைப்பணித் தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளா். இதனால் தொழிலாளா்கள் மற்றும் ஆதரவாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் நெல் கொள்முதல் பணிகளை நிறுத்தினா். இதனால் அங்கு நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்குச்சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, தொழிலாளா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, நெல் கொள்முதல் பணிகள் மீண்டும் தொடங்கின.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT