நாகப்பட்டினம்

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி காஞ்சிபுரம் மாவட்டம், கோட்டூரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் நிஷாந்த் (22), இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். 2-ஆம் ஆண்டு பருவத் தோ்வில், ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்குள்ள தனி அறைக்கு சென்று செவ்வாய்க்கிழமை இரவு தோல்வியடைந்த பாடத்தின் தோ்வுக்கு படித்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் புதன்கிழமை காலையில் நிஷாந்த் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவா்கள் அவரது கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது, எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சக மாணவா்கள் அவருடைய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது நிஷாந்த் மின்விசிறியில் தூக்கிட்டுத் தங்கொலை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக நிஷாந்தை கயிற்றிலிருந்து கீழே இறக்கி மருத்துவரிடம் கொண்டு சென்றனா். அங்கு நிஷாந்த் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸாா் நிஷாந்த் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT