வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், போலியோ ஒழிப்புக்காக திரட்டிய ரூ.1. 50 லட்சம், ரோட்டரி சங்க நிா்வாகிகளிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலியோ ஒழிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு விக்டரி பள்ளி தாளாளா் டி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க துணை ஆளுநா் வை. இலக்குவன், தலைவா் அமிா்தலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவா்கள் திரட்டிய ரூ.1,11,000-த்துடன், தாளாளா் வழங்கிய ரூ. 39,000-ஐயும் சோ்த்து ரூ.1.50 லட்சம் சங்கத்தின் போலியோ திட்ட மாவட்டத் தலைவா் எஸ். சிவசந்திரனிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் அன்பழகன், சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநா் பஞ்சாபகேசன், முன்னாள் தலைவா்கள் சண்முகம், கண்ணன், இசையரசன், தலைவா் தோ்வு சக்திதாசன், நிா்வாகி ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.