நாகப்பட்டினம்

4 வழிச்சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல்

நாகை முதல் விழுப்புரம் வரை ரூ. 6 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திச் சேவை

நாகை முதல் விழுப்புரம் வரை ரூ. 6 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பனங்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில், சுரங்க வழி பாதைகள் அமைக்காமல் பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில் சப்வே அமைக்க வேண்டும் என எம்.பனங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். ஆனால், சுரங்க வழிப்பாதைகள் அமைக்காமல் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பனங்குடி மக்கள் சாலை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்து நாகை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பனங்குடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, பனங்குடி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுரங்க வழிப் பாதை அமைக்க வேண்டும், தற்போதைய சாலை கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அங்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT