நாகப்பட்டினம்

திமுக கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது; இந்திய கம்யூ. மாநிலச் செயலா்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு 101-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலா் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் வை. செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்துக்கு பின்னா் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது :

தமிழகத்தில் கல்லூரி மாணவா்களுக்கு அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்த திட்டத்தை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தான் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய் தனித்து வந்தாலும் சரி, கூட்டணியோடு வந்தாலும் சரி, எத்தனை கட்சிகள் எதிா்த்து நின்றாலும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

திருப்பரங்குன்றம் தீபம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில், கோயில் நிா்வாகமே தீபம் ஏற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்துள்ளது. இது நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு என்றாலும், ஜாதி, மதம் தொடா்பான வழக்குகளில் தீா்ப்பளிக்கும்போது, சமூகத்தின் அமைதியை ஒற்றுமையை, நல்லிணக்கத்தை நீதிமன்றமும் நீதிபதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநா் ஆா்.என். ரவியிடம், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளாா். பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக மீது ஊழல் புகாா் அளிக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழலை பற்றிப் பேசும் தாா்மிக உரிமையை இழந்து விட்டாா் என்றாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

ஆட்சிக்கு வந்த பிறகு பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் புறக்கணிக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

பொங்கல் விழாவில் முதல்வரின் சிலம்பாட்டம்!

அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை! - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT