முகப்பு
நாகப்பட்டினம்

கடல் சீற்றம், சூறைக்காற்று: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக நாகை மாவட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On : 10 ஜனவரி, 2026 at 6:58 PM
நாகையில் சனிக்கிழமை சீற்றமாகக் காணப்பட்ட கடல்.
பகிர்:

கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக நாகை மாவட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத்தீவுக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சனிக்கிழமை கரையை கடக்கும். இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்று மணிக்கு 45 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் அதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து மீன்வளத்துறையினா் உத்தரவின்பேரில், நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா்நகா், பட்டினச்சேரி, செருதூா், வேதாரண்யம் உள்ளிட்ட 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த விசைப் படகு மற்றும் ஃபைபா் படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் ஏற்கெனவே கடலுக்குள் சென்ற மீனவா்கள் விரைந்து கரை திரும்பி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →