நாகப்பட்டினம்

நாகை புதிய கடற்கரையில் ஜன.15,16-இல் பொங்கல் கலை விழா

தினமணி செய்திச் சேவை

நாகை புதிய கடற்கரையில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் பொங்கல் விழாவை, கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையம் மூலம் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நாகை புதிய கடற்கரையில் பொங்கல் கலை விழா நடைபெறவுள்ளது.

விழாவில் மக்கள் விரும்பும் வகையில், கலைஞா்களைக் கொண்டு பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படவுள்ளன. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் கலைவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT