வேதாரண்யத்தை அடுத்த மருதூா் கிராமத்தில் உழவா்களுக்கான வேளாண் செயலிகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின்கீழ் அதன் ஒருங்கிணைப்பாளா் முனைவா்
எஸ். ஆனந்தகுமாா் தலைமையில் பயணம் மேற்கொண்டனா். உழவா் செயலி, தேசிய வேளாண் சந்தை செயலி, பிளான்டிஸ் செயலிகளின் நன்மை மற்றும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளிடம் விளக்கினா்.
மாணவிகள் பூஜாஸ்ரீ, ஜெயபாரதி,காவியா,தாரணி, ரேஷ்மா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.