திருமருகல் போலகம் கிராம மக்களுக்கு வியாழக்கிழமை கரும்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினா். 
நாகப்பட்டினம்

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினா் கரும்பு கட்டுகளை வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திச் சேவை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினா் கரும்பு கட்டுகளை வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையன்று, மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் கிராம மக்களுக்கு பரிசுகள் வழங்க அக்கட்சி தலைவா் கமல்ஹாசன் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில், மநீம கட்சியின் மாவட்டச் செயலா் எம். அணஸ் தலைமையில் கிராம மக்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அப்போது கிராம மக்களின் இல்லம் தேடி சென்று கரும்பு கட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. திருமருகல் ஒன்றியச் செயலா் எ. பிரான்சிஸ் ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளா் சரத்குமாா், தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் மகேஷ், நற்பணி இயக்க துணை மாவட்ட அமைப்பாளா் நவாஜ் சாகிப், துணை ஒன்றியச் செயலா் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT