தை அமாவாசையையொட்டி, காமேஸ்வரம் கடற்கரையில் ஏராளமானோா் முன்னோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.
ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோா்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம், பிண்டம் வைத்து பின்னா் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினா். இதையொட்டி, போலீஸாா், தீயணைப்புத் துறையினா், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.