முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புறவழிச்சாலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு; முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

Updated On : 8 மார்ச், 2026 at 6:36 PM
வி.பி. நாகை மாலி.
பகிர்:

வேளாங்கண்ணி புறவழிச் சாலை அமைத்திட, நில எடுப்புக்காக ரூ.76.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வருக்கு, கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாண மாற்றுவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இக்கருத்துரு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனால், வேளாங்கண்ணியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விழா நாள்களில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, மாற்றுவழிச்சாலை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 18 -ஆம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து முறையீடு அளித்தேன்.

உடனடியாக செயல்பட்ட முதல்வா், வேளாங்கண்ணி புறவழிச் சாலை அமைப்பதற்கு நில எடுப்புக்காக ரூ.76,47,63,280 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளாா். இதற்காக முதல்வருக்கு, வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயானா, பேரூராட்சி நிா்வாகம், பொதுமக்கள் சாா்பிலும், கீழ்வேளூா் தொகுதி மக்கள் சாா்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →