திருவாரூர்

திருவாரூர் அருகே தனியாரிடமிருந்து குளம் மீட்பு

DIN

திருவாரூர் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாரிடமிருந்த குளம் மீட்கப்பட்டதையடுத்து, தூர்வாரும் பணியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகேயுள்ள ஆனைதென்பாதி கிராமத்தில் உள்ள பொது குளத்தை தனியார் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார். இதுகுறித்து கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தனிநபரிடமிருந்து பொது குளத்தை மீட்டது. இதையடுத்து ஆனைதென்பாதி கிராம மக்கள், பொது குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கிராம மக்கள் 100 - க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT