மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதியில் நவம்பர் 4 மின் தடை
மன்னார்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (நவ.4) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும், மன்னார்குடி, கூத்தாநல்லூர், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, காணூர், கோரையாறு, வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளார்.