முகப்பு
திருவாரூர்

அக். 14-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் அக். 14-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திருவாரூர் வட்டம் திருவாதிரைமங்கலத்தில் திருவாரூர் கோட்டாட்சியர் தலைமையிலும், நன்னிலம் வட்டம் திருக்கொட்டாரத்தில் திருவாரூர் சரக துணைப் பதிவாளர், குடவாசல் வட்டம் மேலராமன்சேத்தியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், நீடாமங்கலம் வட்டம் ராயபுரத்தில் திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மன்னார்குடி வட்டம் வடபாதியில் மன்னார்குடி கோட்டாட்சியர், திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூரில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர், கூத்தாநல்லூர் வட்டம் கலமலாபுரத்தில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும் அக். 14-ஆம் தேதி அந்தந்த இடங்களில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, தொடர்புடைய பகுதி மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் கோரிக்கை மனு அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →