பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
இதை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 25-ஆம் தேதி சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. வரும் 27 -ஆம் தேதி விடையாற்றியுடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தா. அரவிந்தன், தக்கார் ரா. சுகுமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.
இதேபோல், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கோகமுகேசுவரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இந்த கோயில்களிலும் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.