திருவாரூர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாபட்டு பகுதியில் புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த தலித் மக்களின் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கதா.க. அரசு தாயுமானவன் தலைமை வகித்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலர் பி. கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், தமுஎகச கிளை செயலர் ஆர். பகவன்ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். கலைமணி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருச்சி ஆட்சியரகம் முன் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

தம்மம்பட்டி பகுதியில் அகல்விளக்குகள் விற்பனை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் மழையால் பொதுமக்கள் அவதி

தேசிய பட்டியலின ஆணைய இயக்குநா் மதுரையில் விசாரணை

SCROLL FOR NEXT