திருவாரூர்

நீடாமங்கலத்தில் தொடர் மழை: நோய்த்தொற்று பரவும் அபாயம்

DIN

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சுகாதாரமற்ற சூழலால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலின் சீற்றத்தால் நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மின்வெட்டு நிலவுகிறது. 
ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது.
தொடர் மழை: இந்நிலையில், நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மின் இணைப்பைச் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் மேலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
நீடாமங்கலத்தைப் பொறுத்தமட்டில், பெரும்பாலான இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளால், துர்நாற்றம் வீசுகிறது. புயலுக்குப் பின்பும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT