திருவாரூர்

பேரிடர் பாதுகாப்பு பயிற்சி முகாம்

DIN


கூத்தாநல்லூரில் வெள்ளிக்கிழமை பேரிடர் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சார்பில், ஆபத்து காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமையொட்டி, குளத்தில் ஒருவர் மூழ்கியது போலவும், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கோ. பன்னீர்செல்வம் தலைமையில், நிலைய முதன்மை தீயணைப்பு வீரர் சிவேந்திரன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு ஆபத்துகால விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முகாமின்போது, கிராம நிர்வாக அலுவலர் கே. ராஜன்பாபு, மருத்துவ உதவியாளர் ஆர். லெனின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT