திருவாரூர்

கோட்டூர் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் கோட்டூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்

DIN

தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் கோட்டூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
கோட்டூர் ஒன்றியம் எளவனூரில் நடைபெற்ற திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் வெ. வீரசேனன் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் கலந்துகொண்டு,பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வைக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, சுரோத்திரியம், புதுக்குடி, பாலையக்கோட்டை, தென்பரை, வல்லூர், கோவிந்தநத்தம், ராதாநரசிம்மபுரம் ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிப்பு பிரசாரம் நடைபெற்றது. வேட்பாளருடன், மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திமுக மாவட்ட துணைச் செயலர் கலைவாணி மோகன், கோட்டூர் ஒன்றியச் செயலர் தேவதாஸ் (தெற்கு), பால. ஞானவேல் (வடக்கு), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் வி.த. செல்வம், மதிமுக  மாவட்டச் செயலர் பி. பாலசந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT