திருவாரூர்

தேர்தல் புகார்களை நேரில் தெரிவிக்கலாம்

நாகை மக்களவைத் தொகுதி செலவினப் புகார்கள் குறித்து நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று செலவினப் பார்வையாளர் தினேஷ் பருச்சூரி தெரிவித்துள்ளார்.

DIN

நாகை மக்களவைத் தொகுதி செலவினப் புகார்கள் குறித்து நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று செலவினப் பார்வையாளர் தினேஷ் பருச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நாகை சட்டப் பேரவைத் தொகுதி, கீழ்வேளூர் சட்டப் பேரவை தொகுதி, வேதாரண்யம் சட்டப் பேரவை தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
நாகை வட்டம், பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளேன். நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளுக்கான செலவினங்கள் தொடர்பான புகார்கள், ஆலோசனைகள் ஏதுமிருப்பின், விருந்தினர் மாளிகையில் காலை 9 முதல் 10 மணி வரை அலுவலக வேலை நாள்களில் நேரிடையாக அல்லது கடிதம்  மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 6381991163 என்ற  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT