திருவாரூர்

திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழா

DIN

நீடாமங்கலம் திரௌபதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் 41-ஆவது ஆண்டு திருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், நாள்தோறும் அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் யமுனாம்பாள் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக, பக்தர்கள் கோயிலிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திரௌபதிம்மன் தனியாகவும், அர்ச்சுணர், கிருஷ்ணர், திரௌபதியம்மன் சமேதராகவும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து யமுனாம்பாள் தோட்டத்தை வந்தடைந்தனர். விழாவில், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர். ராஜசேகரன், அறங்காவலர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கோயிலில் சீர்காழி பம்பை தங்கமாரிமுத்து குழுவினரின் பாரதக் கதை நடைபெற்றது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.30) மஞ்சள் நீர் விளையாட்டு, அபிஷேகம் ஆராதனை நடைபெறவுள்ளது. விழா மே.3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT