திருவாரூர்

சிவன் கோயில்களில் மாசி மாத பிரதோஷ வழிபாடு

DIN

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
லெட்சுமாங்குடி மரக்கடை பகுதியில் உள்ள கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில், மூலவர் கல்யாண சுந்தரேசுவரர், மங்களாம்பிகைக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. 
இதேபோல், பண்டுதக்குடி வாஸலாம்பிகா சமேத உமாபதீசுவரர் கோயில், வேளுக்குடி ருத்ரக்கோட்டீசுவரர் கோயில், லெட்சுமாங்குடி கம்பர் தெரு நீலகண்டேசுவரர் கோயில், காக்கையாடி கைலாசநாதர் கோயில், சாத்தனூர் காளகஸ்தீஸ்வரர் கோயில், திருராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், அதங்குடி விருப்பாட்சிசுவரர் கோயில்  உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மாசி மாத பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நன்னிலத்தில்...
நன்னிலம் பிப். 17: நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு செளந்தரவள்ளி உடனுறை உத்ரகோகர்ணேசுவரர் கோயிலில்  நந்தியம் பெருமானுக்கு மாசி மாத பிரதோஷத்தையொட்டி மஞ்சள் பொடி, இளநீர், பால், தயிர்,சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம்
செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT