திருவாரூர்

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

DIN


முத்துப்பேட்டை ஒன்றியம், கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பள்ளிக்கு கோவை கொசிமா மற்றும் அடைக்கலம் அறக்கட்டளை சார்பில், ரூ.2 லட்சம் மதிப்பில் பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் இரா. முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அமுதா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்னர் வீல் சங்கம் சார்பில், நேசன் பில்டர் விருதுபெற்ற பட்டதாரி ஆசிரியர் சு. அருளானந்தம் பாராட்டப்பட்டார்.
பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வே. கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் பொ. முருகையன்  ஆண்டறிக்கை வாசித்தார்.
மன்னார்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ப. அறிவழகன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் சு.பாரதிமோகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற வட்டாரச் செயலாளர் நா.கி. ஐயப்பன், பெற்றோர்- ஆசிரியர் கழக பொருளாளர் ந.இளம்பரிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
ஆசிரியை அன்புச்செல்வி வரவேற்றார். ஆசிரியர் கு. துரைராசு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT