திருவாரூர்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி திருவாரூரில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர் நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி திருவாரூரில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர் நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வட்டாரம்  வாரியாக தேர்தல் வாசகங்கள் அடங்கிய கோலப்போட்டி, மனித சங்கிலி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், தேர்தல் விழிப்புணர்வு குறும்படம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்தொடர்ச்சியாக, திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுநல அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு தொடர் நடை பேரணி நடைபெற்றது. 
பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. ஆனந்த் தொடங்கி வைத்தார். புதிய ரயில் நிலையத்தில் தொடங்கிய பேரணி பனகல் சாலை, தெற்கு வீதி, துர்காலயா சாலை வழியாக விளமல் கல்பாலம்  வரை சென்று நிறைவடைந்தது.
பேரணியில் சென்றவர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பங்கேற்றனர். இதில், கோட்டாட்சியர் முருகதாஸ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT