திருவாரூர்

சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி விழா: தமிழக ஆளுநர் பங்கேற்பு

DIN

திருவாரூரில் நடைபெறவுள்ள சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார்.
திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜயந்தி இசை விழா, ஆண்டுதோறும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, முத்துசுவாமி தீட்சிதர் இல்லத்தில், திங்கள்கிழமை (மே 6) முதல் புதன்கிழமை வரை கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன.
பின்னர், திருவாரூர் கமலாம்பாள் சன்னிதி எதிரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி இசை விழா மே 9-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மே.11-ஆம் தேதி தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசையஞ்சலி செலுத்தப்படுகிறது. 
நிகழ்ச்சிக்கு, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட சங்கீத மும்மூர்த்திகள் அறக்கட்டளை அறங்காவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ஜயந்தி விழாக் குழுத் தலைவர் ஆர். ராமசுப்பு தலைமை வகிக்கிறார். காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், காணொலி காட்சி மூலம் விழாவை தொடங்கி வைத்து அருளாசி வழங்குகிறார். பஞ்சரத்ன கீர்த்தனை இசைப்பு நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். அன்றிரவு சங்கீத மும்மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT